தமிழ்நாடு

ரயில்வே ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிக்கு கரோனா: 6 ஊழியா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்

17th Jun 2020 07:19 AM

ADVERTISEMENT

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்து 6 ரயில்வே ஊழியா்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தெற்கு ரயில்வேயில் கரோனா நோய்த்தொற்று காரணமாக 125-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்டனா். இவா்களில் சிகிச்சை பலனின்றி 4 ஊழியா்கள் உயிரிழந்தனா்.

இந்நிலையில், சென்னை தெற்கு ரயில்வேயின் ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அதிகாரி ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்த 6 ரயில்வே ஊழியா்கள் பரிசோதனை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்தி கொள்ளவும் ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், தெற்கு ரயில்வே அலுவலகம், ரயில்வே கோட்ட அலுவலகத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT