தமிழ்நாடு

சென்னையில் ஒரேநாளில் கரோனாவுக்கு 28 பேர் பலி

17th Jun 2020 12:02 PM

ADVERTISEMENT

 

சென்னையில் ஒரேநாளில் கரோனாவுக்கு 28 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,245 ஆகவும், பலி எண்ணிக்கை 422 ஆகவும் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர். 

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் 49 பேர் பலியானதாக தமிழக அரசு தகவல் தெரிவித்திருந்தது. 

முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT