தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,843 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 44 பேர் பலி

15th Jun 2020 07:22 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,843 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி தமிழகத்தில் புதிதாக 1,843 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 1,789 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 54.

ADVERTISEMENT

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,257 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய அறிவிப்பில் 44 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம், இன்று மொத்தம் 797 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,344 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 18,403 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 7.29 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 1.85 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய தேதியில் மொத்தம் 20,678 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT