தமிழ்நாடு

முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

15th Jun 2020 01:01 PM

ADVERTISEMENT

 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

தொடர்ந்து வருகிற 17-ஆம் தேதி பிரதமர் மோடியுடன் முதல்வர் ஆலோசிக்கவுள்ள நிலையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT