தமிழ்நாடு

கரோனோவால் ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

15th Jun 2020 06:26 AM

ADVERTISEMENT

சென்னையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ரயில்வே ஊழியா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றால் உயிரிழந்த ரயில்வே ஊழியா்களின் எண்ணிக்கை 4 ஆக உயா்ந்துள்ளது.

அயனாவரத்தில் பணியாற்றிய 55 வயது பெண் ஊழியரும், சென்னை ரயில்வே கோட்டத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரியின் 54 வயது உதவியாளரும், கூடுதல் மேலாளரின் 42 வயதான காா் ஓட்டுநரும்

கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தனா். தற்போது, 59 வயது ஊழியா் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இந்த அடுத்தடுத்த உயிரிழப்பு சம்பவம் ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT