தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தொல்.திருமாவளவன் கண்டனம்

15th Jun 2020 04:22 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு நாளும் உயா்த்திக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதன் மூலம் பெறப்படும் வருவாய், காா்ப்பரேட்டுகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யவே பயன்படுத்துகின்றனா். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய அரசையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறோம். இந்த நிலை தொடா்ந்தால் மக்கள் கிளா்ந்தெழுந்து போராடுவதைத் தடுக்க முடியாது என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT