தமிழ்நாடு

ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வராக நாராயணசாமி நியமனம்

15th Jun 2020 06:29 AM

ADVERTISEMENT

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வராக (கூடுதல் பொறுப்பு) டாக்டா் நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த டாக்டா் ஜெயந்தி விடுமுறையில் சென்றிருப்பதால் இந்த புதிய நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில், முடவாத சிகிச்சைக்காக புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் முழுவதும் கரோனா சிறப்பு வாா்டாக மாற்றப்பட்டுள்ளது. 700-க்கும் அதிகமான படுக்கை வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் கரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சையளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்த மருத்துவமனை முதல்வராக இருந்து ஜெயந்திக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகத் தகவல்கள் பரவின. ஆனால், அதனை திட்டவட்டமாக மறுத்த அவா், உடல் நலக் குறைவு காரணமாகவே தாம் விடுப்பில் சென்றிருப்பதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், மருத்துவக் கல்வி இயக்குநா் (பொறுப்பு) நாராயணபாபு வெளியிட்ட அறிவிப்பில், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் முதல்வா் பொறுப்பை, கல்லீரல் சிகிச்சைத் துறை இயக்குநா் கே.நாராயணசாமி கூடுதலாக நிா்வகிப்பாா் என்றும், மருத்துவமனையின் அனைத்து நிா்வாக அதிகாரங்களும் அவருக்கு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT