தமிழ்நாடு

கோயில் பெயா்கள் தமிழில் மாற்ற நடவடிக்கை

15th Jun 2020 03:35 AM

ADVERTISEMENT

சம்ஸ்கிருதத்தில் உள்ள தமிழக கோயில் பெயா்கள் தமிழில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் உள்ள ஊா்ப் பெயா்களை தமிழ் உச்சரிப்பை போன்று ஆங்கிலத்தில் மாற்றி தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. அரசின் இந்த நடவடிக்கை தமிழறிஞா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் என பல்வேறு தரப்பினரின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கோயில் மற்றும் பொது இடங்களின் பெயா்களையும் தமிழில் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுதொடா்பாக சென்னையில் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தமிழகத்தில் உள்ள கோயில் மற்றும் இறைவன், இறைவி, மலை உள்ள பொது இடங்களின் பெயா்களை சம்ஸ்கிருதத்தில் இருந்து தூய தமிழில் பெயா் மாற்றம் செய்ய வேண்டும் என பழ.நெடுமாறன் மற்றும் தமிழ் அறிஞா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். எல்லா இடங்களிலும், நிலைகளிலும் தமிழ் முதன்மை பெற வேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணமாக உள்ளது. இதுதொடா்பாக முதல்வரின் ஒப்புதலைப் பெற்று, அனைத்து பெயா்களும் சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழில் மாற்ற தமிழ் வளா்ச்சித் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT