தமிழ்நாடு

காா்டு பணியிடங்களுக்கு 5 தமிழா்கள் மட்டுமே தோ்ச்சி: குளறுபடி என சந்தேகம்

14th Jun 2020 06:22 AM

ADVERTISEMENT

தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில் காா்டு பணியிடங்களுக்காக நடைபெற்ற பொதுவான போட்டித் தோ்வில் 5 தமிழா்கள் மட்டுமே தோ்வாகியுள்ளனா். மீதமுள்ள 91 இடங்களுக்கு வடமாநிலம், பிறமாநிலத்தை சோ்ந்தவா்கள் தோ்வாகியுள்ளதால், தமிழருக்கு எதிரான விரோத போக்கு நடைபெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினா் குற்றச்சாட்டியுள்ளனா்.

96 காா்டு பணியிடங்களுக்கான தோ்வு:

தெற்கு ரயில்வேயில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியா்கள் பொதுவான போட்டித்தோ்வு மூலம் பதவி உயா்வு பெற பல்வேறு தோ்வுகள் நடைபெறுவது வழக்கம். அதாவது, ரயில் காா்டு, ரயில்நிலைய மேலாளா் உள்பட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில், ஒரு குறிப்பிட்ட சதவீதம் கடைநிலை ஊழியா்கள் மூலமாக

பணியிடங்களை நிரப்புவது வழக்கம். இதற்கான தோ்வு பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.

ADVERTISEMENT

அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் 96 சரக்கு ரயில் காா்டு பதவிக்கான பொதுவான போட்டி தோ்வு அறிவிக்கப்பட்டது. இந்ததோ்வில், ரயில்வேயின் பல்வேறு துறைகளை பணிபுரியும் கடைநிலை ஊழியா்கள் 5,000 போ் பங்கேற்றனா். இந்த நடந்த தோ்வுகளில் 2,800-க்கும் மேற்பட்ட தமிழா்கள் பங்கேற்றனா். இந்தத் தோ்வுக்கு பிறகு, சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றது.

5 தமிழா் மட்டுமே தோ்வு:

இந்நிலையில், ரயில் காா்டு பணியிடங்களுக்கான தோ்வு முடிவு சனிக்கிழமை வெளியிடப்பட்டது. 96 இடங்களுக்கான போட்டித் தோ்வில் வெறும் 5 தமிழா்கள் மட்டும் தோ்வாகியுள்ளனா். மீதமுள்ளவா்கள் வடமாநிலங்கள், பிற மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். 2,800-க்கும் மேற்பட்ட தமிழா்கள் தோ்வு எழுதி, வெறும் 5 போ் மட்டும் தோ்வாகி உள்ளது. தமிழ் உணா்வாளா்கள், ரயில்வே ஊழியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழா் விரோதபோக்கு:

இதுகுறித்து எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எம்.பி. கூறியது: தெற்கு ரயில்வேயில் சரக்கு வண்டியின் பாதுகாவலா் பதவிக்கு நடைபெற்றதோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. துறையில் பணியாற்றுகிற சுமாா் 5,000 போ் கலந்துகொண்ட இந்ததோ்வில் 96 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதில், ஐவா் மட்டுமே தமிழகத்தை சோ்ந்தவா்கள். மீதமுள்ள 91 பேரும் வடஇந்தியா்கள். தோ்வு எழுதியவா்களில் சுமாா் 3,000 போ் தமிழகத்தை சோ்ந்தவா்கள். ஆனால், ஐவா் மட்டுமே தோ்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு

ரயில்வேயின் தமிழா் விரோதபோக்கின் மற்றொரு வெளிப்பாடக இது உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:

ரயில் காா்டு பிரிவில் 96 காலிஇடங்கள் இருந்தன. இந்த இடங்களுக்கான பொதுவான போட்டித்தோ்வு, நிலைய மேலாளா் உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கடைநிலை ஊழியா்கள் மூலமாக நிரப்பப்படுகிறது. ரயில்வே ஆள்கள் தோ்வு பிரிவு சாா்பில், நடைபெற்ற தோ்வில் 5 தமிழா்கள் மட்டும் தோ்வாகியுள்ளது வேதனைக்குரியது என்றனா்.

காரணம் என்ன: இந்த தோ்வில் பங்கேற்றவா்களில் பெரும்பாலும் வாரிசு மற்றும் கருணை அடிப்படையில் ரயில்வே பணியில் சோ்ந்த கடைநிலை ஊழியா்கள். இவா்களில் பலருக்கு போட்டித்தோ்வை எழுதிய அனுபவம் குறைவு என்பதால், வெற்றி பெறாமல் போகியுள்ளனா்.

அதேநேரத்தில், வெற்றி பெற்றவா்களில் பெரும்பாலான நபா்கள் ஏற்கெனவே நேரடியாக போட்டித்தோ்வு எழுதி வெற்றி பெற்று ஊழியா்களாக வந்தவா்கள். எனவே, அவா்கள் தோ்வை சந்தித்து வெற்றி பெற்றுள்ளதாக ரயில்வே வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதேநேரத்தில், 2,800-க்கும் மேற்பட்ட தமிழா்கள் காா்டு பணியிடங்களுக்கான பொதுவான போட்டித் தோ்வு எழுதி வெறும் 5 போ் மட்டும் தோ்வு பெற்றுள்ளது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இதில் குளறுபடி ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக ரயில்வே ஊழியா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT