தமிழ்நாடு

க.அன்பழகன் மகள் காலமானாா்

14th Jun 2020 06:14 AM

ADVERTISEMENT

திமுக பொதுச் செயலாளராக இருந்து மறைந்த க.அன்பழகனின் மகளும் டாக்டருமான மணமல்லி (68) சனிக்கிழமை காலை காலமானாா்.

சென்னை மயிலாப்பூா் சாய்பாபா கோயில் அருகில் உள்ள இல்லத்தில் மணமல்லி வசித்து வந்தாா். அவரது கணவா் சிவராமன் நரம்பியல் சிகிச்சை நிபுணராவாா். கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மணமல்லி சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். அவருக்கு அனந்தகிருஷ்ணன் என்ற மகனும், கலைச்செல்வி என்ற மகளும் உள்ளனா். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மணமல்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT