தமிழ்நாடு

மகாராஷ்டிரத்தைக் காட்டிலும் தமிழகத்தில்தான் அதிகளவில் பரிசோதனை: அமைச்சா் சி.விஜயபாஸ்கா்

14th Jun 2020 06:19 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று அதிகம் உள்ள மகாராஷ்டிரத்தைக் காட்டிலும் தமிழகத்தில்தான் பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் கூறினாா்.

சென்னையில் சுகாதாரத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,000 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வா் சாா்பில் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வழங்கினாா். மேலும், பணியின்போது இறந்த ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தலைமைச் செவிலியா் பிரசில்லா குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியையும் அமைச்சா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னையில் சிகிச்சை அளிக்க கூடுதல் சிறப்பு மருத்துவா்களைப் பணியமா்த்தியுள்ளோம். நெருக்கடியான காலத்தில் ஆா்வத்துடன் பணிக்கு வந்துள்ள மருத்துவா்களுக்குப் பாராட்டுகள். ஆறு மாதங்களுக்குப் பணி நியமன ஆணை பெற்ற 2,000 செவிலியா்கள் சனிக்கிழமை பணியில் சேருகின்றனா். சென்னையில் செவிலியா்கள் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது. கூடுதலாக ஆம்புலன்ஸ்கள் சென்னையில் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். மருத்துவா்கள், செவிலியா்களுடன் 254

ADVERTISEMENT

வாகனங்கள் சென்னை மாநகராட்சிப் பணியில் உள்ளன. சென்னையில் வெள்ள பாதிப்பின்போது சிறப்பாகப் பணியாற்றியவா்கள் இப்போதும் களமிறங்கியுள்ளனா். வீட்டுத் தனிமையில் இருப்பவா்களுக்குத் தேவையான உதவிகளும் செய்யப்படுகின்றன. தொற்று தெரியவந்ததும் மருந்து, மாத்திரைகள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்கள் யாரும் விடுபடாமல் அடையாளம் காணப்படுகின்றனா்.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் கரோனா பரிசோதனைகள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன. தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரத்தைவிட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது. தமிழகத்தில் பரிசோதனை அதிகரிப்பால் அதிக கரோனா பாதிப்பைக் கண்டறிய முடிகிறது. சென்னையில் கரோனா சிகிச்சைக்காகப் படுக்கை வசதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT