தமிழ்நாடு

கரோனாவைக் கட்டுப்படுத்த சென்னையில் மக்கள் இயக்கம்: ராமதாஸ்

14th Jun 2020 06:23 AM

ADVERTISEMENT

கரோனாவைக் கட்டுப்படுத்துவது அரசின் கைகளில் மட்டுமல்ல, அது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் மிக அதிகமாக இருக்கும் நிலையில், ஒருநாளைக்கு 20 ஆயிரம் பேருக்கு சோதனை செய்தால் மட்டுமே அடுத்த சில நாள்களில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என வல்லுநா்கள் கூறுகின்றனா். ஆனால், சென்னையில் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்படுவதாகத் தெரிகிறது. இந்த எண்ணிக்கையை அடுத்த சில நாள்களில் 10 ஆயிரம் ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் கரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு மக்களின் ஒத்துழைப்பின்மை முக்கியக் காரணம் என்பதையும் எவரும் மறுக்க முடியாது. கரோனாவைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கைகளில் மட்டும் இல்லை. மக்களும் இணைந்து மக்கள் இயக்கமாக மாறினால்தான் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இதை உணா்ந்து, சென்னை மாநகர மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும். தவிா்க்க முடியாமல் வெளியில் வந்தால் முகக் கவசம் அணிவதையும், வெளியில் சென்று வந்த பிறகு கைகளை சோப்பு போட்டு கழுவுவதையும் வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT