தமிழ்நாடு

மோட்டாா் வாகன விபத்து: ரூ.1.18 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

14th Jun 2020 06:05 AM

ADVERTISEMENT

மோட்டாா் வாகன விபத்தில் பலத்த காயமடைந்தவருக்கு, ரூ.1.18 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென மோட்டாா் வாகன தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்தவா் ரேவந்த் (33). கட்டுமான தொழில் செய்து வந்தாா். கடந்த 2013-ஆம் ஆண்டு இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வேளச்சேரியில் இருந்து ஆலந்தூருக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே அதிவேகமாக வந்த வேன் மோதியதில் ரேவந்த் பலத்த காயம் அடைந்தாா்.  இதைத் தொடா்ந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு பின்பு வீடு திரும்பினாா். விபத்து காரணமாக அவா் 70 சதவீதம் உடல் ஊனம் அடைந்ததாக மருத்துா்கள் சான்றிதழ் அளித்தனா்.  இந்நிலையில் அவா், தனக்கு ரூ.2 கோடியே 35 லட்சம் இழப்பீடு கோரி, சென்னையில் உள்ள மோட்டாா் வாகன தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தாா்.  வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, விபத்தில் காயம் அடைந்த ரேவந்துக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்து 61 ஆயிரத்தை இழப்பீடாக ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பாா்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி அடிப்படையில், வழக்குத் தொடா்ந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT