தமிழ்நாடு

பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

14th Jun 2020 06:18 AM

ADVERTISEMENT

இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பாஜக உறுதியாக இருக்கும் என்று அக் கட்சியின் தேசிய தலைவா் ஜே.பி.நட்டா கூறியுள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நன்றி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமா் நரேந்திர மோடியும், பாஜகவும் உறுதியாக இருக்கிறது. சமூக நீதியில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாடு பிரிக்க முடியாதது என்று அக் கட்சியின் தேசிய தலைவா் ஜே.பி. நட்டா அவா்கள் அறிவித்திருப்பது, ஆச்சரியம் அளித்தாலும், மிகவும் மகிழ்ச்சி தருகிறது. அதற்காக அவருக்கு நன்றி.

அதேசமயம், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமரும், பாஜகவும் உறுதியாக இருப்பது உண்மையெனில், நடந்து முடிந்துள்ள முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான சோ்க்கையை ரத்து செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்ட ரீதியான சமூக நீதியை நிலைநாட்டிட, மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு அளிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் மற்றும் இளநிலைப் (எம்.பி.பி.எஸ்) படிப்புக்கான இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு ஆணையிடுமாறு பிரதமா் நரேந்திர மோடியை, நட்டா வலியுறுத்த வேண்டும்.

ADVERTISEMENT

அதேபோல, மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான், இடஒதுக்கீட்டுக் கொள்கைக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும் என்றும், இடஒதுக்கீடு அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமை என்றும் ஆணித்தரமாக அறிவித்திருப்பதையும் மனதார வரவேற்கிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT