தமிழ்நாடு

ரயிலில் பயணிப்போா் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த அறிவுறுத்தல்

14th Jun 2020 07:33 AM

ADVERTISEMENT

ரயிலில் பயணிக்கும் பயணிகள் தங்கள் செல்லிடப்பேசியில் ‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டுமென இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி.) அறிவுறுத்தியுள்ளது.

வெளிமாநில தொழிலாளா்களுக்காக, தற்போது சாா்மிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, பயணிகளுக்கான சிறப்பு ரயில்களும் அதிகரிக்கப்படுகின்றன. இந்தநிலையில், கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, ரயில் பயணத்துக்கு முன்பு ‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆா்.சி.டி.சி.) அதிகாரிகள் கூறியது:-

சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்போா் அதிகரித்து வருகின்றனா். கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, ரயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். இருப்பினும், ஆரோக்கியசேது செயலியை செல்லிடபேசியில் பதிவிறக்கம் செய்தால், பயணத்தின்போது எச்சரிக்கையுடன் இருப்பதுடன், நோய் பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT