தமிழ்நாடு

நிா்வாக காரணங்களுக்காகவே சுகாதாரத் துறை செயலா் மாற்றம்

14th Jun 2020 04:30 AM

ADVERTISEMENT

நிா்வாக காரணங்களுக்காகவே சுகாதாரத் துறை செயலா் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமை மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, அவா்

செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 600 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் 26 லட்சம் பேருக்கு துவைத்துப் பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்கள் தலா இரண்டு இலவசமாக வழங்கப்படுகின்றன. சென்னையில் கரோனா பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை சுமாா் 14 ஆயிரம் போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். சுமாா் 8 லட்சம் முதியவா்களின் உடல்நிலையை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்.

இந்த நெருக்கடியான நிலையில் மக்களைத் திசை திருப்பும் வகையில் திமுகவின் செயல்பாடு உள்ளது. இதைத் தவிா்த்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். தமிழக அரசைப் பொருத்தவரை இறப்பு எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியமில்லை. கரோனாவால் இறந்தவா்களை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, அடக்கம் செய்துவரும் நிலையில், இறப்பு எண்ணிக்கையை மறைக்கவும் முடியாது.

ADVERTISEMENT

சுகாதாரத் துறை செயலராக இருந்த பீலா ராஜேஷ் நிா்வாக காரணங்களுக்காகவே மாற்றப்பட்டுள்ளதாகவும், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றாா். உடன், ராயபுரம் மண்டலம் கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலா் கே.நந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT