தமிழ்நாடு

‘பொருளாதாரத்தில் பின்தங்கியோா் இடஒதுக்கீட்டுக்கு சான்றுகள் அளிக்க வேண்டாம்‘

14th Jun 2020 07:35 AM

ADVERTISEMENT

பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு பெறுவதற்கு வருமானச் சான்றிதழ்களை அளிக்க வேண்டாமென, மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு:

தமிழக அரசின் அறிவுறுத்தல்படி ஏற்கெனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது. அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டுக்குத் தேவைப்படும் வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை, இணையதளத்தின் மூலமோ, வேறு எந்த வகையிலும் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT