தமிழ்நாடு

புதுச்சேரியில் தீவிரமடையும் கரோனா: ஒரேநாளில் 18 பேருக்கு தொற்று உறுதி

14th Jun 2020 06:03 PM

ADVERTISEMENT

 

புதுவையில் ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. மேலும், பாதிப்பு எண்ணிக்கையும் 200ஐ நெருங்கியுள்ளது.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 194 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 99 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளது. இதுவரை 91 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுவையில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 13 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 3 பேர் ஜிப்மரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்காலைச் சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிரத்திலும், மாஹே பிராந்தியத்தில் ஒருவரும் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை பீமன் நகரைச் சேர்ந்த 56 வயது ஆண் உயிரிழந்தார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தற்போது இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒருவரும், ஜிப்மரில் 8 பேரும் என 9 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது என்றார்.

Tags : Puducherry corona virus கரோனா வைரஸ் புதுவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT