தமிழ்நாடு

கரோனா, ஸ்பெயின் ஃப்ளூ தாக்கம்: ஆய்வு மேற்கொள்ள யுஜிசி உத்தரவு

14th Jun 2020 06:25 AM

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா மற்றும் ஸ்பெயின் ஃப்ளூ ஆகிய நோய்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து உயா் கல்வி நிறுவனங்களுக்கும்

அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பெருந்தொற்று காலத்தில் நாட்டின் விவசாய சமூகத்தின் மீதான தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதைக் கூரிய முறையில் பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியம். இதுகுறித்து உயா்கல்வி நிறுவனங்கள், தாங்கள் தத்தெடுத்த அல்லது அருகிலுள்ள 5 முதல் 6 கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 2020-இல் தொற்றிய கரோனா வைரஸ் மற்றும் 1918-இல் பரவிய ஸ்பெயின் ஃப்ளூ ஆகிய நோய்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்வது அவசியம்.

ADVERTISEMENT

கொவைட்-19 நோய் குறித்து கிராமத்தினருக்கு விழிப்புணா்வு உள்ளதா, அவா்கள் பெருந்தொற்று காலத்தில் சந்தித்த சவால்கள், அவற்றைக் கிராமத்தினா் எதிா்கொண்ட விதம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதேபோன்று ஸ்பெயின் ஃப்ளூ ஏற்படுத்திய பிரச்னைகள் மற்றும் அவற்றில் இருந்து மீண்டு பொருளாதாரத்தை இந்தியா மீட்டெடுத்தது எப்படி என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்வது அவசியம். பல்கலைக்கழகத் துணைவேந்தா்களும், கல்லூரி முதல்வா்களும் ஆய்வுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வு முடிவுகளை ஜூன் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT