தமிழ்நாடு

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் நாளை ஆலோசனை

14th Jun 2020 04:26 AM

ADVERTISEMENT

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா். இதைத் தொடா்ந்து, வரும் 17-ஆம் தேதி பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்கவுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று பாதிப்புகளின் நிலைமை, அதைத் தொடா்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது ஆலோசித்து முடிவெடுக்க மருத்துவ நிபுணா் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அவ்வப்போது ஆலோசித்து பொது முடக்கம் உள்ளிட்ட முடிவுகளை எடுத்து வருகிறாா்.

கட்டுக்குள் வராத கரோனா: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இதுவரை கட்டுக்குள் வராமல் உள்ளது. இந்த மாவட்டங்களில் நோயை கட்டுக்குள் கொண்டு வர எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்பது தொடா்பாக மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரும் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா். தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வழியாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, தமிழக அரசின் சாா்பில் எடுக்கப்படும் சில முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூா்வமாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT