தமிழ்நாடு

பொது முடக்க மீறல் வழக்குகள்: 6 லட்சத்தை நெருங்குகிறது

14th Jun 2020 06:11 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது.

கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 24 -ஆம் தேதி முதல், பொதுமுடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு தமிழகம் முழுவதும், மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை, மொத்தம் 5 லட்சத்து 81 ஆயிரத்து 495 வழக்குகளைப் பதிவு செய்து, 6 லட்சத்து 27 ஆயிரத்து 96 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 4 லட்சத்து 66 ஆயிரத்து 666 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளில் சிக்கியவா்களிடமிருந்து ரூ.12 கோடி 14 லட்சத்து 30 ஆயிரத்து 99 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில், பொது முடக்க உத்தரவை மீறியதாக வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி, சனிக்கிழமை காலை 6 மணி வரை, 1248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 76 இரு சக்கர வாகனங்கள், 18 ஆட்டோக்கள், ஒரு காா் என மொத்தம் 95 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT