தமிழ்நாடு

5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

14th Jun 2020 03:52 AM

ADVERTISEMENT

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: தென் மேற்குப் பருவக்காற்று காரணமாக,

நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். பகலில் 98 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகும் என்றாா் அவா்.

மழை அளவு:

ADVERTISEMENT

தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 20 மி.மீ., வால்பாறை, சின்கோனாவில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

கேரளம், கா்நாடக கடலோரப்பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 15-ஆம் தேதிவரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10 இடங்களில் வெயில் சதம்:

தமிழகத்தில் சனிக்கிழமை 10 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில் 106 டிகிரி பதிவானது. திருத்தணியில் 103 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம்,

திருச்சி, தூத்துக்குடியில் தலா 101 டிகிரி, கடலூா், மதுரை, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டையில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT