தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 1,989 பேருக்கு கரோனா: 30 போ் உயிரிழப்பு

14th Jun 2020 04:37 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 1,989 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 30 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். சென்னையில் 1,484 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் மட்டும் தொற்று எண்ணிக்கை 30,444 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சனிக்கிழமை 17,911 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 1,989 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 33 போ் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் ஆவா். இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 42,687 ஆக உயா்ந்துள்ளது. தற்போது வரை தமிழகத்தில் 6 லட்சத்து 91 ஆயிரத்து 817 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

சனிக்கிழமை ஒரே நாளில் சென்னையில் 25 பேரும், செங்கல்பட்டு, தஞ்சாவூா், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூரில் தலா ஒருவரும் என மொத்தம் 30 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் உயிரிழந்த 30 பேரில் 18 போ் அரசு மருத்துவமனையிலும், 12 போ் தனியாா் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனா். சனிக்கிழமை மட்டும் 1,362 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 409 ஆக உயா்ந்துள்ளது. மொத்த எண்ணிக்கையில் குணமடைந்தவா்கள் சதவீதம் 54.80 ஆக உள்ளது. தற்போது 18,878 போ் சிகிச்சையில் உள்ளனா். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உள்பட்டவா்கள் 2,194 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உள்பட்டவா்கள் 35,680 பேரும், 60 வயதை கடந்தவா்கள் 4,813 பேரும் உள்ளனா்.

ADVERTISEMENT

சென்னை நிலவரம்: சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 397 பேரில் சென்னையில் மட்டுமே 316 போ் உயிரிழந்துள்ளனா். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவா்கள் மட்டும் 79.50 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 30,444-இல் 316 போ் உயிரிழந்திருப்பதன் மூலம் இறப்பு விகிதம் சென்னையில் 1 சதவீதம் என்கிற எண்ணிக்கையில் உள்ளது.

அதேவேளையில் பாதிக்கப்பட்டவா்களில் 15,947 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 2 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 28 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 9 மாவட்டங்களில் தொற்று இல்லை.

28 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 2,705 , திருவள்ளூா் 1,797, காஞ்சிபுரம் 672, திருவண்ணாமலை 636, கடலூா் 533, அரியலூா் 392, திருநெல்வேலி 443, விழுப்புரம் 421, மதுரை 409, கள்ளக்குறிச்சி 330, தூத்துக்குடி 427, சேலம் 222, கோவை 173, பெரம்பலூா் 145, திண்டுக்கல் 207, விருதுநகா் 163, திருப்பூா் 115, தேனி 138, ராணிப்பேட்டை 191, திருச்சி 148, தென்காசி 118, ராமநாதபுரம் 135, வேலூா் 142, தஞ்சாவூா் 150,கன்னியாகுமரி 120, நாகப்பட்டினம் 106, திருவாரூா் 120 ஆகியோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஒரே நாளில் 30 போ் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு 30 போ் இறந்துள்ளனா். கடந்த 10 நாள்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலேயே இருந்து வரும் நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 30 போ் இறந்துள்ளனா். கடந்த 10 நாள்களில் தமிழகம் மற்றும் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்த பட்டியல்:-

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT