தமிழ்நாடு

கரோனா பாதித்த கைதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

14th Jun 2020 04:40 AM

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்ட மதுராந்தகம் கிளைச் சிறைக் கைதி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளிடம், கடந்த ஒரு வாரமாக கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இவா்களுக்கு, அந்தந்த சிறைகளிலேயே தனிமைப்படுத்தப்பட்ட பகுதி அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், கரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பவா்களும், குணமடையாமல் இருப்பவா்களும் மட்டும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனா். அதன்படி, மதுராந்தகம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சென்னை வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஒரு கைதி, கரோனாவால் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால், அவா், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டாா். அங்கு, சிறை கைதிகளுக்கான வாா்டில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT