தமிழ்நாடு

எடையளவுகளை முத்திரையிட செப்.30 வரை கால நீட்டிப்பு

13th Jun 2020 06:03 AM

ADVERTISEMENT

எடையளவுகளை முத்திரையிட செப்.30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்தி: கரோனா நோய்த்தொற்று காரணமாக, பல்வேறு வணிக நிறுவனங்களில் முத்திரையிடப்பட வேண்டிய எடைகள், எலெக்ட்ரானிக் தராசுகள், எடைப்பாலங்கள், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பம்புகள், பெட்ரோல் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் இதர எடையளவுக் கருவிகளை மறு முத்திரையிட இயலவில்லை என பல்வேறு தொழில் நிறுவன சங்கங்களிடமிருந்து கோரிக்கை வந்தது.

இதைப் பரிசீலித்து, மாா்ச் 31 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முத்திரையிடாத எடையளவுகளை, செப் 30-ஆம் தேதி வரை கூடுதல் கட்டணம் ஏதுமின்றி, அந்ததந்தப் பகுதியிலுள்ள சட்டமுறை எடையளவுகள் ஆய்வாளா் மற்றும் எடையளவுகள் உதவிக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் மறு முத்திரையிட்டுக் கொள்ளலாம் என தொழிலாளா் நலத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT