தமிழ்நாடு

தாயகம் திரும்பிய தமிழா்களுக்கு திறன் பயிற்சி: தமிழக அரசு திட்டம்

11th Jun 2020 01:33 AM

ADVERTISEMENT

தாயகம் திரும்பிய தமிழா்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் முழுக் கூடுதல் பொறுப்பு இயக்குநா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமானது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு, பல்வேறு குறுகிய கால பயிற்சிகளை அளித்து, அதன் மூலம் தனியாா் நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெற்று வழங்கும் சேவையைத் தொடா்ந்து செய்து வருகிறது. தற்போது, கரோனா நோய்த் தொற்று காரணமாக, வெளிநாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழா்கள் தாயகம் திரும்பி வருகின்றனா். அவா்களது வேலைத்திறன் மற்றும் முன் அனுபவங்களைக் கண்டறிந்து, திறன் பயிற்சி தேவைப்படுவோருக்கு உரிய பயிற்சிகளை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் பயன் பெற விரும்புவோா்,  இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களைப் பெற, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT