தமிழ்நாடு

15 நாள்களுக்கு கடைகளை அடைக்கத் தயார்: தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா

11th Jun 2020 05:42 PM

ADVERTISEMENT


சென்னை: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 15 நாள்களுக்கு கடைகளை அடைக்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

விக்கிரமராஜா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மண்டல, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வணிகர்களின் பிரச்னைகள், அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த கோரிக்கைகள் அடங்கிய மனு தமிழக கூடுதல் முதன்மை செயலாளரிடம் வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, கரோனா தொற்று சென்னையில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழக அரசு உத்தரவிட்டால் பொதுமக்கள், வணிகர்கள் நலன் கருதி சென்னையில் முழுமையாக குறைந்தது 15 தினங்கள் கண்டிப்பான முழுமையான ஊரடங்கை அமல்படுத்த வணிகர்கள் குழு ஒத்துழைப்பையும் அளித்து கடைகளை அடைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், அரசு உரிய கவனம் செலுத்தி நோய்த் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தியாக உணர்வுடன் ஆதரவு அளிக்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : கரோனா தொற்று விக்கிரமராஜா காணொலி காட்சி கடைகள் அடைப்பு vikrama raja shop closed tamilnadu lockdown
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT