தமிழ்நாடு

வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை

11th Jun 2020 11:19 PM

ADVERTISEMENT

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: தென் மேற்குப் பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டமாகக் காணப்படும். அவ்வப்போது லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கரூரில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, மன்னாா்வளைகுடா, வடதமிழக கடலோரப்பகுதியில், ஆந்திரகடற்கரைப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு ஜூன் 12-ஆம்தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம்.

ADVERTISEMENT

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கா்நாடகம், கொங்கண் கடலோரப் பகுதிகளில் 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT