தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் சார்பு ஆய்வாளர் பலி

11th Jun 2020 04:26 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருசக்கர வாகனத்துடன் லாரி மோதிய விபத்தில் காவல் சார்பு ஆய்வாளர் சம்பவ இடத்திலே வியாழக்கிழமை உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம் புத்தூரைச்சேர்ந்தவர் சாலமன்வேத மணி இவர் சுரண்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் பிரதீஸ் சார்பு ஆய்வாளராக காவல் துறையில் 2016 ஆம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வருகிறார். இவர் தற்போது சென்னை தலைமை செயலகத்தில் ரோவிங் யூனிட்டில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நான்கு நாட்கள் விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

வியாழக்கிழமையன்று தனது ஊரிலிருந்து மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் வழியில் நத்தம்பட்டி அருகே தனியார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டிப்பர் லாரி கிராவல் ஏற்றிக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்தபோது நேருக்கு நேர் மோதியதில் சார்பு ஆய்வாளர் பிரதீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து நத்தம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தைக் கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக சேர்த்தனர்.

ADVERTISEMENT

பின்னர் டிப்பர் லாரி டிரைவர் ஞானகுருவை கைது செய்து நத்தம்பட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்தார் சார்பு ஆய்வாளர் பிரதீஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags : road accident சாலை விபத்து ஸ்ரீவில்லிபுத்தூர் srivilliputhur காவல் சார்பு ஆய்வாளர் inspector
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT