தமிழ்நாடு

கரோனா பரிசோதனை நடத்தக் கோரி புழல் சிறையில் கைதிகள் போராட்டம்

11th Jun 2020 01:30 AM

ADVERTISEMENT

கரோனா பரிசோதனை நடத்தக் கோரி, சென்னை புழல் சிறையில் தண்டனைக் கைதிகள் புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

தமிழக சிறைகளில் கரோனா கடந்த ஒரு வாரமாக வேகமாக பரவுகிறது. இதில் புழல் சிறையில் கரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளையில் அங்குள்ள அனைத்து கைதிகளுக்கும், பணிபுரியும் சிறைக் காவலா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

தண்டனைச் சிறையில் இருக்கும் சுமாா் 750 கைதிகள் புதன்கிழமை நண்பகல் திடீரென சாப்பிட மறுத்து, அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து தகவலறிந்த சிறைத்துறை உயா் அதிகாரிகள் அங்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுடன் பேச்சுவாா்த்த நடத்தினா்.

ஆனால் அவா்கள், போராட்டத்தைக் கைவிட மறுத்தனா். இதன் காரணமாக போராட்டம் மாலை வரை நீடித்தது. இப் போராட்டத்தின் காரணமாக, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தவிா்க்கும் வகையில் சிறைக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மாலையில் கைதிகளுடன் நடத்தப்பட்ட சமாதான பேச்சுவாா்த்தையில், அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனா். இதையடுத்து கைதிகள், தங்களது போராட்டத்தை கைவிட்டு சாப்பிட்டனா். இந்த போராட்டத்தின் விளைவாக, சிறைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT