தமிழ்நாடு

சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

11th Jun 2020 10:49 AM

ADVERTISEMENT


சேலம்: சேலத்தில் ரூ.441 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

சேலம் மாவட்டம் குரங்குச்சாவடி முதல் புதிய  பேருந்து நிலையம் வழியே அண்ணா பூங்கா வரை கட்டப்பட்ட பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு 5.01 கி.மீ. நீளத்துக்குக் கட்டப்பட்டுள்ள புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இன்று திறந்து வைத்துள்ளார்.

ADVERTISEMENT

சேலம் மாநகரில்  கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க 441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதுடன், 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 7.8 கிலோ மீட்டர் நீள தூரத்தில், தமிழகத்தில் இதுவரை எங்கும் இல்லாத தொழில்நுட்பங்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 173 வலிமையான தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மீது ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழ் இரண்டு புறமும் 7 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்துரோடு மையப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் அதிநவீன சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. 

கரோனா நோய் தாக்கம் காரணமாக இறுதி கட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம்  கட்டுமான பணிகள் தொடர அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, தற்போது முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்.

இதேபோல, சேலத்தின் வணிகப் பகுதியான லீ பஜார்- மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு இடையே, ரயில் பாதையால் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க, 42.14 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட  சேலம் மக்களின் நீண்ட கால பிரச்னைகளுக்குத் தீர்வாக கட்டப்பட்டு வந்த இரு பாலங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து  இவ்விரு பாலத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து திறந்து வைத்தார்.

மேலும் சேலத்தில் நீதித்துறை சார்பில் சேலம் சட்டக் கல்லூரி மற்றும் மாணவ, மாணவியர்கள் விடுதிக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 286 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.
 

Tags : சேலம் Palanisamy ஈரடுக்கு பாலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT