தமிழ்நாடு

ஓமந்தூராா் மருத்துவமனை ஒப்பந்த செவிலியா்கள் போராட்டம்

11th Jun 2020 01:28 AM

ADVERTISEMENT

கூடுதல் பணிச் சுமையுடன் பணியாற்றி வருவதாகக் கூறி ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த செவிலியா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை நிா்வாகிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். கூடுதல் எண்ணிக்கையில் செவிலியா்களை பணியமா்த்துவதாக அவா்கள் உத்தரவாதம் அளித்ததைத் தொடா்ந்து செவிலியா்கள் பணிக்குத் திரும்பினா்.

இதுகுறித்து ஒப்பந்த செவிலியா்கள் சிலா் கூறியதாவது: தமிழகத்திலேயே தற்போது சென்னையில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனா். இதன் காரணமாக எங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஆனால் பணிச்சுமைக்கு ஏற்றவாறு உரிய ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை. இதைக் கண்டித்தே போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT