தமிழ்நாடு

தமிழகம் மற்றும் புதுவைவில் அடுத்த 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு 

11th Jun 2020 01:42 PM

ADVERTISEMENT

தமிழகம் மற்றும் புதுவைவில் அடுத்த 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாள்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காரைக்கால் 3 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. 

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மத்திய மேற்கு, வட மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

Tags : Rain karaikkal Weather
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT