தமிழ்நாடு

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.11.61 கோடி அபராதம் வசூல்

11th Jun 2020 12:41 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வழக்குகளில் இதுவரை ரூ. 11.61 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என பொதுமக்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்த நிலையிலும், பல்வேறு பகுதிகளில் வெளியில் சுற்றுவோரை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர், அதிகாரிகள் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,15,938 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 5,70,892 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும், இதுவரை 4,61,582 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.11.61 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : lockdown சென்னை தமிழகம் ஊரடங்கு மீறல் அபராதம் வசூலிப்பு police
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT