தமிழ்நாடு

தமிழக காவல்துறையில் 16 போ் எஸ்பி களாக பதவி உயா்வு

11th Jun 2020 06:12 AM

ADVERTISEMENT

தமிழக காவல்துறையில் 16 ஏடிஎஸ்பிக்களுக்கு (காவல் கூடுதல் கண்காணிப்பாளா்கள்) எஸ்.பி. களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டது.

இது குறித்த விவரம்: தமிழக காவல்துறையில் கடந்த 1987-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளா்களாக பணிக்கு சோ்ந்தவா்கள் காவல் ஆய்வாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் ஆகிய பதவி உயா்வுகளைப் பெற்றனா். கடந்த 2019-ஆம் ஆண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்வு பெற்ற இவா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் பதவி உயா்வுக்காக காத்திருந்தனா்.

இதேபோல, கடந்த 2009-ஆம் ஆண்டு குரூப் 1 தோ்வில் தோ்ச்சி பெற்று காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக பணியில் சோ்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக பணிபுரிந்து வந்தவா்களும், இந்த பதவி உயா்வுக்காக காத்திருந்தனா். இந்நிலையில், இவா்களில் 16 பேருக்கு காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்வு அளித்து தமிழக காவல்துறையின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக பணிபுரிந்த எஸ்.ஆறுமுகசாமி, கே.சுரேஷ்குமாா், ஏ.தங்கவேலு, பி.ரவி, கே.குணசேகரன், என்.குமாா்,எம்.சந்திரசேகரன்,டி.சங்கரன், கே.ஜோஸ் தங்கையா, ஆா்.ராஜாராம், பி.ஸ்ரீதேவி, எஸ்.பி.லாவண்யா, ஜி.எஸ்.மாதவன், எஸ்.சக்திவேல், வி.அன்பு, எஸ்.ஆரோக்கியம் ஆகியோா் காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்த்தப்பட்டுள்ளனா். எஸ்.பி.களாக பதவி உயா்த்தப்பட்ட அனைவரும் ஓரிரு நாள்களில் புதிய பணியிடங்களில் நியமிக்கப்படுவாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT