தமிழ்நாடு

கொரடாச்சேரியில் டி.எஸ்.பி. நிவாரணம் வழங்கி உறுதி மொழி ஏற்பு

11th Jun 2020 05:35 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில், கரோனா நிவாரண உதவிகளை வழங்கிய டி.எஸ்.பி. உறுதிமொழி ஏற்றார்.

சீனாவில் உருவான கரோனா, உலகத்தையே உருமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆறு மாதங்களாகியும் கரோனா தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருபுறம் ஊரடங்கும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது. மறுபுறம் அதிகமான அளவில் கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. உயிரிழப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்நிலையில், ஏழை, எளிய, கூலித் தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகின்றனர். கூத்தாநல்லூர் அருகேயுள்ள, கொரடாச்சேரியில், காங்கிரஸ் திருவாரூர் மாவட்டத் தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ்.எம்.பி.துரைவேலன் ஏற்பாட்டின்படி, எஸ்.எம்.பி.சிங்காரவேலன் நினைவு அறக்கட்டளைச் சார்பில், கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த, ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஏழை , எளியவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு, அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ADVERTISEMENT

எஸ்.எம்.பி.துரைவேலன் அலுவலக வளாகத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தார். கொரடாச்சேரி காவல் துறை ஆய்வாளர் பாரதி முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் அன்பு வே.வீரமணி வரவேற்றார். விழாவில், திருவாரூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தினேஷ்குமார் ஏழை, எளியவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். 

அப்போது அவர் பேசியது..

கரோனா தொற்று நோயை நாம்,ஒழிக்க வேண்டுமானால், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். எங்கு இருந்தாலும் இடைவெளி விட்டுத்தான் நிற்க வேண்டும். பேச வேண்டும். கிருமி நாசினியையோ அல்லது சோப்பையோ பயன்படுத்தி இரண்டு கைகளையும், சுத்தமாகக் கழுவ வேண்டும். 

நமது உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அளவில், சத்தான உணவுகளையே சாப்பிட வேண்டும். தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருந்து, நம் பகுதிக்குள் கரோனா தொற்று நுழையாமல் தடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, பொதுமக்களுடன் இணைந்து, கரோனாவுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags : Relief திருவாரூர் கொரடாச்சேரி கரோனா நிவாரண Koradacherry
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT