தமிழ்நாடு

கரோனாவுக்கு வேலூரில் மேலும் ஒரு முதியவர் பலி

11th Jun 2020 05:51 PM

ADVERTISEMENT

 

கரோனா தொற்று பாதிப்புக்கு வேலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அஜீஜியா வீதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்து வந்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து கரோனாவில் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை அவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு முதியவர் உயிரிழந்ததால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : vellore கரோனா Corona kills
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT