தமிழ்நாடு

கரோனா பரிசோதனை: கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வருகை

11th Jun 2020 09:40 PM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனா பரிசோதனைக்காக கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தென் கொரியாவிள் இருந்து தமிழகம் வந்துள்ளன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வியாழன் மாலை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கரோனா பரிசோதனைக்காக கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தென் கொரியாவிள் இருந்து தமிழகம் வந்துள்ளன.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கரோனா பரிசோதனைக்காக தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளதாகவும், வாரம் 1 லட்சம் என்ற அளவில் இதுவரை 6 லட்சத்து 27 ஆயிரம் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளன ‘ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : corona testing PCR test kits south korea import கரோனா பரிசோதனை பிசிஆர் கருவிகள் தென் கொரிய இறக்குமதி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT