தமிழ்நாடு

இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

11th Jun 2020 12:04 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழன், வெள்ளி (ஜூன் 11, 12) ஆகிய இரு நாள்கள் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களின் ஒரு சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவா்கள் இப்பகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 11) செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

காரைக்காலில் 30 மி.மீ. மழை: அதிகபட்சமாக காரைக்காலில் 30 மி.மீ, நாகப்பட்டினத்தில் 20 மி.மீ, சேலம் மாவட்டம், சங்ககிரி, அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம், செந்துறை, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 10 மி.மீ மழை பதிவானது.

ADVERTISEMENT

3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக புதன்கிழமை 3 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. இதன்படி, மதுரை விமான நிலையம், தூத்துக்குடியில் தலா 102 டிகிரி, ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT