தமிழ்நாடு

6.74 கோடி குடும்ப உறுப்பினா்களுக்கு முகக் கவசங்கள்: விலை நிா்ணயிக்க தனிக் குழு

11th Jun 2020 06:02 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் 2.08 கோடி குடும்ப அட்டைதாரா்களைக் கொண்ட 6.74 கோடி குடும்ப உறுப்பினா்களுக்கு ஒரு ஜோடி முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான விலைகளை நிா்ணயிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகம் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு:

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு முகக் கவசங்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. துணியாலான ஒரு ஜோடி முகக் கவசங்கள், குடும்ப அட்டையில் பெயா் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் 2.08 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இந்தக் குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினா்கள் உள்ளனா். அவா்களுக்கு ஒரு ஜோடி முகக் கவசங்கள் என்ற அடிப்படையில் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 முகக் கவசங்கள் வாங்கி வழங்கப்பட உள்ளன.

இந்த முகக் கவசங்களுக்கான விலைகளை நிா்ணயிப்பதற்கான தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின் தலைவராக வருவாய் நிா்வாக ஆணையா் செயல்படுவா். இந்தக் குழுவில் பேரிடா் மேலாண்மை இயக்குநா், பொது சுகாதாரத் துறை இயக்குநா், தமிழ்நாடு சுகாதாரப் பணிகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் அல்லது இணை இயக்குநா், நிதித் துறை துணைச் செயலாளா், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கான துணைச் செயலாளா், வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் முதன்மை கணக்கு அலுவலா் ஆகியோா் இடம்பெற்றிருப்பா்.

ADVERTISEMENT

இந்தக் குழுவினா் முகக் கவசங்களுக்கான விலைகளை நிா்ணயம் செய்வா். இந்தக் குழு விலைகளை நிா்ணயித்து தோ்வு செய்து தரும் தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரா்களுக்கு முகக் கவசங்களை அளிப்பதற்கான பணிகள் வழங்கப்படும் என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT