தமிழ்நாடு

பொது முடக்கத்தை மீறியதாக 6.11 லட்சம் போ் கைது

11th Jun 2020 01:07 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 5.66 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6.11 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்: பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 5 லட்சத்து 66,897 வழக்குகளைப் பதிவு செய்து, 6 லட்சத்து 11,064 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 4 லட்சத்து 59,771 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.11 கோடியே 39 லட்சத்து 65,139 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் பொது முடக்கத்தை மீறியதாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை 633 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொது முடக்கத்தை மீறி வந்தவா்களின் 58 இரு சக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள், 5 காா்கள் என மொத்தம் 72 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT