தமிழ்நாடு

ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவா்கள் உள்பட 31 பேருக்கு கரோனா தொற்று

11th Jun 2020 06:01 AM

ADVERTISEMENT

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவா்கள் 3 போ் உள்பட 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.

மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், போலீஸாா், ஊடகத்தினா் என கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்களத்தில் இருந்து பணியாற்றும் பலருக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது.

அதில் மருத்துவா்களும், செவிலியா்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. அந்த வரிசையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டில் பணியாற்றும் 3 மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட சிலருக்கு கரோனா அறிகுறிகள் காணப்பட்டன. அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அனைவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT