தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா: சென்னையில் மட்டும் 1,407

11th Jun 2020 06:17 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 23 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் பலியானோர் 2, அரசு மருத்துவமனையில் பலியானோர் 21. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், இன்று ஒரேநாளில் 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 20,705 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட 17,659 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று மட்டும் 17,675 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இன்று 16,829 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6,55,675 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Tags : சென்னை தமிழகம் Corona virus coronavirus கரோனா வைரஸ் கரோனா Corona COVID 19 கரோனா தொற்று Tamilnadu Corona தமிழகம் கரோனா Chennai Corona சென்னை கரோனா positive cases
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT