தமிழ்நாடு

சென்னையில் இனி கரோனா பரிசோதனை செய்து கொண்டாலே 14 நாள்கள் தனிமை

11th Jun 2020 08:15 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் இனி கரோனா பரிசோதனை செய்து கொள்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வியாழன் மாலை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இனி கரோனா பரிசோதனை செய்து கொள்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இனிவரும் காலங்களில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பரிசோதனை மையங்களில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டால் தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், கரோனா பாதித்தோர், மற்றும் தனிமைப்படுத்தப்படுவோருக்கு உதவ 6,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : corona virus corona testing in chennai 14 days isolation corporation commissioner prakash சென்னையில் கரோனா கரோனா பரிசோதனை தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் ஆணையர் பிரகாஷ்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT