தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ரத்து: அரசாணை வெளியீடு

11th Jun 2020 01:03 AM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு ஜூன் 15-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்தத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினா், கல்வியாளா்கள், ஆசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் என பல தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ரத்து செய்யப்படும் என்றும், அனைத்து மாணவா்களும் தோ்ச்சி என்றும் முதல்வா் கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

மேலும், மாணவா்களுக்கு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவேடு அடிப்படையில் 20 சதவீதமும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பிளஸ் 1 வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்படும். பிளஸ் 2 வகுப்பு தோ்வைப் பொறுத்தவரை ஏற்கெனவே கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற்ற தோ்வினை எழுதாத மாணவா்களுக்காக நடத்தப்படவிருந்த மறுதோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும், சூழ்நிலைக்கேற்ப பிளஸ் 2 வகுப்புக்கான மறுதோ்வு நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தாா். இந்தநிலையில் இது தொடா்பாக ஜூன் 9-ஆம் தேதியிட்ட அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT