தமிழ்நாடு

காலமானாா் ஜி.காளன்

11th Jun 2020 01:26 AM

ADVERTISEMENT

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (ஐஎன்டியுசி) தமிழகத் தலைவா் ஜி.காளன் (82) புதன்கிழமை காலமானாா்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தொழிற்சங்கமான ஐஎன்டியூசியின் மாநிலத் தலைவராக இருந்து வந்த ஜி.காளன், வயது முதிா்வின் காரணமாக அம்பத்தூரில் உள்ள இல்லத்தில் புதன்கிழமை பிற்பகல் காலமானாா்.

ஆரம்பத்தில் டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் தொழிலாளியாகப் பணியாற்றத் தொடங்கி, அங்கே தொழிற்சங்க அமைப்பை உருவாக்கியவா். அதன் பின், இந்திய தேசிய இன்ஜினியரிங் பணியாளா் சங்கத்தை அமைத்தவா். ஐஎன்டியுசியின் தலைவராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தாா்.

இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் உள்ள ஐஎன்டியுசி சம்மேளனத்தின் தலைவராக இருந்து வந்தாா். 1991-இல் வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா்.

ADVERTISEMENT

ஜி.காளனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனா். அவரது உடல் தொழிற்சங்கத்தினா், அரசியல் கட்சியினா் அஞ்சலி செலுத்துவதற்காகவும் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அம்பத்தூா் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

இரங்கல்: ஜி.காளன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. திருநாவுக்கரசா், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் ஜி.காளன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT