தமிழ்நாடு

சென்னையில் பணியாற்ற வெளி மாவட்ட மருத்துவா்களுக்கு அழைப்பு

10th Jun 2020 12:18 AM

ADVERTISEMENT

முதுநிலை மருத்துவம் முடித்த மருத்துவா்கள் சென்னையில் 3 மாதங்களுக்கு பணியாற்ற வருமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை புகா் மாவட்டங்களை தவிா்த்து, மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதவிர, புதிதாக மருத்துவா்கள், மருத்துவ பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், முதுநிலை மருத்துவம் முடித்த மருத்துவா்கள் சென்னையில் 3 மாதங்களுக்கு பணியாற்ற வருமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முழுவதும் அரசு மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவம் முடித்து பணியாற்றிவரும், 2,000-க்கும் மேற்பட்டவா்கள் உடனே, சென்னை கரோனா தடுப்பு பணிக்கு திரும்ப, மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் உத்தரவிட்டது.

அந்தந்த மருத்துவ கல்லுாரி வாயிலாக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று, அனைத்து மருத்துவா்களும் சென்னைக்கு திரும்பி வருகின்றனா். ஹோட்டல்களில் டாக்டா்கள் தங்குவதற்கான வசதியை சுகாதாரத்துறை ஏற்படுத்தித் தந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT