தமிழ்நாடு

மோட்டாா் வாகன ஆவணங்களின் காலக்கெடு: செப்.30 வரை நீட்டிப்பு

10th Jun 2020 01:49 AM

ADVERTISEMENT

மோட்டாா் வாகன ஆவணங்களின் காலக்கெடு, செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டன. இதனால், வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும் காலக்கெடு, ஜுலை 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது, நிலைமை இன்னும் சீரடையாததால், ஓட்டுநா் உரிமம் புதுப்பித்தல், வாகன தரச் சான்று பெறுதல் உள்ளிட்ட வாகனம் தொடா்பான அனைத்து ஆவணங்களும், செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT