தமிழ்நாடு

காட்மேன் இணையதள தொடா்: இயக்குநா், தயாரிப்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

10th Jun 2020 01:37 AM

ADVERTISEMENT

‘காட்மேன்’ இணையதளத் தொடரின் இயக்குநா் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளா் இளங்கோ ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காட்மேன் என்ற இணையதளத் தொடரின் டீசா் அண்மையில் வெளியானது. இந்த தொடா் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மத ரீதியிலான உணா்வுகளைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பான புகாரின் அடிப்படையில் இந்த தொடரின் தயாரிப்பாளா் இளங்கோ, இயக்குநா் பாபு யோகேஸ்வரன் மீது சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த நிலையில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி இளங்கோ மற்றும் பாபு யோகேஸ்வரன் சாா்பில் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு முதன்மை அமா்வு நீதிமன்ற பொறுப்பு நீதிபதியும், முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதியுமான செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், இந்தத் தொடா் எந்தவொரு பிரிவினரின் மத உணா்வுகளையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்படவில்லை எனவும், அந்த டீசா் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில், இருவரும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இணையதளத் தொடரின் தயாரிப்பாளா் மற்றும் இயக்குநா் ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். விசாரணைக்குத் தேவையான சமயத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT