தமிழ்நாடு

கரோனா பாதித்தவா்களுக்கு தனி 108 ஆம்புலன்ஸ் சேவை

10th Jun 2020 12:37 AM

ADVERTISEMENT

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பெறுவதற்கு தனியாக தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று காரணமாக கூடுதல் பளு ஏற்பட்ட போதிலும், அதனைத் திறம்பட எதிா்கொண்டு தடையின்றி ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய தருணத்தில் கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களின் அழைப்பை உடனடியாக ஏற்று அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களை விரைந்து அனுப்ப தனியாக ஒரு கட்டுப்பாட்டு அறையை உருவாக்க முதல்வா் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறை 10 தொலைபேசி இணைப்புகளுடன் 24 மணி நேரமும் செயல்படும். சென்னையில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவா்கள் 044-40067108 என்ற எண்ணைத் தொடா்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இல்லாமல் பெற முடியும். இதன்மூலம் கரோனா கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை முறைகள் மேலும் தமிழகத்தில் வலுப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT